Friday 7 October 2011

வாழ்க்க ஒரு வட்டம்டா: ‘சவால் சிறுகதை-2011’


“விஷ்னு நாம் திட்டம் போட்ட மாதிரி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. எஸ்.பி. கோகுல் நம்ம வலையில விழற நேரம் நெருங்கிடுச்சு, நான் சொன்ன மாதிரி குறியீட  கடைசிநேரத்துல அனுப்பிடு”

“சார் இதுனால எனக்கு எந்த பிரச்சனை வராம பார்த்துக்கோங்க, எஸ்.பி ரொம்ப பொல்லாதவன். இந்த விஷயத்துல என் தலையீடு இருக்குனு தெரிஞ்சுதுனா கண்டிப்பா என்ன சும்மா விடமாட்டான்.”

“கோகுல நான் பார்த்துக்குறேன், அவன் நம்மளுக்கு செஞ்ச துரோகத்த மறந்துடாத, அவன் அணுஅணுவா கஷ்டப்படனும், நாம பட்ட வேதனையும் வலியையும் அவனுக்கு புரியனும். இப்ப கிளம்பு நாம நாளைக்கு பார்க்கலாம்.”




ரவி அவசரமாக சிலவற்றை பையில் திணித்துக்கொண்டிருந்தான், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புத்துணர்ச்சி,  தன்னுடன் கல்லூரியில் படித்த கார்த்திக்,சதீஷ்,தாமு மற்றும் கோகுலுடன் ஒரு பயணம், கோகுலின் ஆபிஸ் ஃபிரண்டு விஷ்னுவும் வருவதாக சொல்லியிருந்தான். ஹார்ன் சத்தம் கேட்டதும் வந்திருப்பது கோகுல் என்பதை அறிந்துக்கொண்டு வீட்டைப்பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து கீழே இறங்கி வந்தான்.

ஏண்டா வரோம்னு தெரியும்ல, ரெடியா இருக்க வேண்டியதுதான? என்ற கோகுலிடம் “ ஃப்ரீயாவிடு மச்சி இன்னும் டைம் நிறைய இருக்கு” பதிலளித்தான் ரவி.

“இல்லடா, இப்ப அப்படியே விஷ்னு வீட்டுக்கு போய் அவன பிக்கப்பண்ணனும், அவன்கிட்டதான் குறியீடு இருக்கு, ட்ராபிக் வேற அதிகமா இருக்கு”


"அதான் வந்துட்டேன்ல, சரி மச்சி எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்," கார் ஓட்டிக்கொண்டிருக்கும் கோகுலை பார்த்து கேட்டான் ரவி, “சொல்றா”

“நீ எப்படிடா எஸ்.பி ஆன, இல்ல,  காலேஜ்வரைக்கும் பி. கோகுல்தானே?”

“எங்க அப்பா பேர் பிரகாசம், தாத்தா பேரு சுப்பிரமணியம், அதான் இனிஷியலா எஸ்.பினு மாத்திட்டேன், ஆபிஸ்ல மூனு கோகுல், ரெண்டு பேருக்கும்  இனிஷியல் ‘பி’  அதனாலதான், பேரும் கெத்தா இருந்துதா… ஆமாஅதுக்கென்ன இப்ப”

“அப்ப தமிழ்ல உன் பேர் சு.பின்றது தெரியுமா,” மொக்கையாக இருந்தாலும் அனைவரும் சிரித்தனர்.

“மொக்கைய போடாத, இருக்குற ட்ராபிக்ல எப்ப போய் சேருவோம்னு தெரியல, ஒழுங்கா பாட்டு கேளு” ஒலியை கூட்டினான்.

“நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா – ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்தது.”

“என்னைய நிறுத்த சொல்லிட்டு நீ ஆரம்பிச்சுட்ட, வேணாம்டா, அழுதுடுவேன், மரியாதையா பாட்ட மாத்து”

“இதுக்குதான் ஒழுங்கா ட்ரேன்ல போலாம்னு சொன்னேன், ட்ராபிக் இல்லாம ஃப்ரீயா போயிருக்கலாம் யாராவது கேட்டீங்களா” சதீஷ் கூறினான்.

“மச்சி ட்ரேன்ல போனா பயணம், அதுவே கார் இல்ல பைக்ல போனா அனுபவம், வழியில எங்க வேணாலும் நிறுத்தி இயற்கைய ரசிச்சுக்குட்டே போகலாம்” எனக்கூறிய தாமுவை பார்த்து கார்த்திக் “என்னடா ஆச்சு இவனுக்கு, நாம போறது இடத்துக்கும் இவன் பேசறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா, சரக்கடிச்சுட்டு மட்டையானா பரவாயில்ல, வழியில கூவத்த தவிர எதுவும் இல்ல, இவன் என்னடான்னா”

இன்னோவா கார் ஒரு வீட்டின் முன்பு நின்றது, இரண்டுமுறை ஹார்ன் சத்தம் எழுப்பியதும் கீழே  இறங்கி வந்தான் விஷ்னு.

“என்னடா இன்னும் ரெடி ஆகல”

“இல்லடா மச்சி ஆபிஸ் வேல இருக்கு, நீங்க போங்க”

“டேய் இப்ப சொன்னா எப்படி? பாஸ்கிட்ட நான் பேசிக்கிறேன், நீ கிளம்பு”  என்றான் கோகுல்.

“நம்ம டெக்லீட பத்தி தெரிஞ்சும் ஏண்டா புரியாத மாதிரி பேசற..சாரி பாஸ் தப்பா நினைச்சுகாதீங்க  இப்ப என்னால வரமுடியாது, நாம் இன்னொரு நாள் சந்திக்கலாம். இந்தாங்க குறியீடு” என ஒரு துண்டு சீட்டை கொடுத்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்று சென்றான்.

கார் முழு வேகத்தில்  பறந்து கொண்டு சென்றது.

“மச்சி உன் ஃப்ரெண்டு கஞ்சன்னு சொல்லிருக்க, அதுக்குனு இப்படியா, ஒரு எ4 ஷீட நாப்பதா கட் பண்ணி பிரிண்டவுட் எடுத்திருக்கான். சரி அததான் ஒழுங்கா செஞ்சானா, குடுத்தது அவன், வாங்கினது நான், என்னவோ ஸ்கூல லீவ் லெட்டர் எழுதுற மாதிரி  என்னடா இது,” என்று சீட்டை கோகுலிடம் நீட்டினான்.

“நமக்கு தேவ அந்த குறியீடு, அது இருக்குல அப்பறம் என்ன கவலை”

அவர்கள் சேரும் இடம் வந்தது, திருவிழா போல கூட்டம் கூடி இருந்தது. அன்று தல நடிக்கும் 50வது படம் ரிலீஸ்,  “சரி மச்சி கவுண்டர்ல போய் இந்த குறியீட காட்டு, டிக்கெட் கொடுப்பாங்க “.

சிறிது நேரத்தில் வியர்வையுடன் கோபம் கொப்பளிக்க வந்த ரவி கோகுலிடம்
“மச்சி அந்த ******* நம்மள ஏமாத்திட்டாண்டா.”

“என்னடா சொல்ற”

“அது தப்பான குறியீடு டா,  இப்ப ஒரு டிக்கெட்டும் இல்ல, ஹவுஸ்புல் டா, என்னடா பண்றது, அவன் மட்டும் என் கையில கிடச்சான் செத்தான்டா.”

அடுத்த நாள் கோகுலின் ஆபிஸ்.

கோபத்துடன் விஷ்னுவின் காபின் நோக்கி சென்ற கோகுல் அந்த துண்டு சீட்டை விஷ்னுவின் டேபில் மீது வீசினான், அப்போது சுழலும் நாற்காலியிலிருந்து திரும்பிய உருவத்தை பார்த்து திடுக்கிட்டான்.

வாங்க எஸ்.பி என்று வரவேற்றான் குரு, கோகுலுடைய  டெக் லீட், மேஜையிலிருந்த இன்னொரு துண்டுச்சீட்டில் “ எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீடுதான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் – விஷ்னு.” பார்த்ததும் கோகுலுக்கு அனைத்தும் புரிந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, தளபதியின் படம், முதல் ஷோ டிக்கெட் வைத்திருந்த  குருவின் வண்டியை பஞ்சர் செய்து, அதை சரி செய்ய பார்கிங் ஏரியாவிற்கு சென்றபோது கிடைத்த நேரத்தில் ஷோ டிக்கெட்டை கிழித்த ஞாபகம் கோகுலுக்கு வந்தது.

அப்போது  குருவின் கைப்பேசி சினுங்கியது, அதில் "informer vishnu" எனத்தெரிய "வாழ்க்க ஒரு வட்டம்டா" தளபதியின் குரல் ரிங்டோனாய் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஹா.. ஹா.. ஹா..எதிர்முனையில் சிரித்துக்கொண்டிருந்தான் குரு.


8 comments:

இராஜராஜேஸ்வரி said...

nice..

ravi said...

thank you..

Madhavan Srinivasagopalan said...

ஒக்கே.. வாழ்த்துக்கள்

--- உங்களுடன் எனது இந்தக் கதை மூலம் போட்டி போடும் வலை-நண்பன்

ravi said...

நன்றி மாதவன்.

நம்பிக்கைபாண்டியன் said...

தலைப்புக்கேற்ற தலதளபதி கதை! வாழ்த்துக்கள்.

“மச்சி ட்ரேன்ல போனா பயணம், அதுவே கார் இல்ல பைக்ல போனா அனுபவம், வழியில எங்க வேணாலும் நிறுத்தி இயற்கைய ரசிச்சுக்குட்டே போகலாம்”

“மச்சி உன் ஃப்ரெண்டு கஞ்சன்னு சொல்லிருக்க, அதுக்குனு இப்படியா, ஒரு எ4 ஷீட நாப்பதா கட் பண்ணி பிரிண்டவுட் எடுத்திருக்கான்.

சந்தானம் சொல்வது போல் இருந்தது, nice

ravi said...

நம்பிக்கைக்கு நன்றி தோழரே..

Radhakrishnan said...

திரைப்படத்தை வைத்து ஒரு கதை. வித்தியாசமான சிந்தனைதான். வாழ்த்துகள்.

ravi said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

Post a Comment