Tuesday 4 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 3: இரத்த அரியணை




அடுத்த நாள் காலை


நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா?” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

நீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.

சோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில்  ஐந்து மன்னர்கள்  சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன்  எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன.  ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.

“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால்  நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,

மரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது. 

  


மேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.

“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”

“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும்.  இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”

அவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு  மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு  கண்டிப்பாக  ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த  மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு,  நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”

“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”

“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும்.  என் முப்பது வருட உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”

“வாழ்த்துக்கள் சார்” 


“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன,  இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”

“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.


தொடரும்…       tbc..


No comments:

Post a Comment