Saturday, 15 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 6: குழப்பம்.


"எ"ஆம் அறிவு:இதுவரை
மரபணுக்கள் மூலம் கடந்தகால நினைவுகளை சேகரிக்கும் பொறியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ராமானுஜம், அதை சோழர்களின் வாரிசான ரவி மூலம் சோதித்து, அவனுடைய கடந்த கால நினைவுகள் மட்டுமில்லாமல் அவனுடைய முன்னோர்களின் நினைவுகளையும்  சேகரிக்க முடியும், அதன் மூலம் எண்ணற்ற பயங்களை அடைய முடியும் என  ரவியை நம்பவைக்கிறார். ராமானுஜம் பற்றிய உண்மையை கடந்த கால நினைவுகள் மூலம் அறியும் ரவி, அதைப்பற்றி ராமானுஜத்துடன் விவாதிக்க முடிவு செய்தான்.

இனி..

மேஜையிலிருந்த ரவியை எழுப்பிய ராமானுஜம்,  “நேரம் வந்துவிட்டது, எழுங்கள், இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு தேவை, நாளையுடன் நம் ஆய்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிடும்”

மூளையின் அதீத உழைப்பால் மிகுந்த அசதியில் இருந்த ரவி மேஜையில் இருந்து எழுந்து அப்படியே ஓய்வறைக்கு சென்றான். இரவு முழுவதும் தான் மரபணு நினைவில் கண்டதை எண்ணி, நாளை எப்படியும் இந்த ராமானுஜத்தை பற்றியும் அவருடைய ஆராய்ச்சியின் உண்மை நோக்கத்தையும் அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான்.

அடுத்த நாள் காலை,

ரவி, இன்னும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? காலம் இனி பொன் போன்றது.

“ம்.. சரி, எப்படியும் என்னை நீங்கள் விடப்போவதில்லை, என் கேள்விகளுக்காவது பதில் சொல்லுங்களேன். இங்கு என்னதான் நடந்ததுக்கொண்டிருக்கிறது”

“நான் என்ன முட்டாளா, உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதை நான் அறிவேன்.”

“நீங்கள் எதை பற்றி  சொல்கிறீர்கள்  என்று தெரியவில்லையே,?” மழுப்பினான் ரவி.

ராமானுஜம் சிரித்துக்கொண்டே “அமாம், உங்களுக்கு எப்படி தெரியும்”

“சரி உங்களிடம் வேறொன்று  கேட்க வேண்டும்”

“ம்.. கேளுங்கள் ”

“சில விஷயங்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருக்கிறது, உண்மையாக இல்லை, வரலாறு தவறாக இருக்கிறது. எதிலும் பொறுத்தம் இல்லையே.”

ராமானுஜம் இடமறித்து “பொறுத்தமா? எதனுடன், உங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததுடனா, வரலாறு புத்தகத்திலா இல்லை விக்கிபீடியாவில் பார்த்ததா”

“புத்தகங்கள், வரலாற்றுப்பதிவுகள், ஆவணங்கள் என அனைத்தையும் ஒப்பிடும் போது நான் பார்த்த விஷயங்கள் பெரிதும் வேறுபட்டிருக்கிறதே” என்றான் ரவி.

 “ரவி, ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எழுதலாம், எதைபற்றியும் எழுதலாம், இன்று வரலாற்றை பற்றி அறிய நாம் உபயோகிக்கும் புத்தகங்கள், கல்சுவடுகள், ஓலைச்சுவடிகள் என ஏறத்தாழ  அனைத்தும் உலகம் தட்டையானது என்று நம்பியவர்கள் எழுதியது, ஏன், உலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஒரு புத்தகம் சொல்கிறதே, இன்னும் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் அது, ”

“சரி, இப்போது என்ன சொல்ல வருகுறீர்கள்.”

“உண்மையான வரலாறு என்று ஒன்றும் இல்லை, இந்த வேளையில்தான் நான் கண்டுபிடித்த பொறி உதவி செய்கிறது, தவறான புரிதலுக்கு வாய்ப்பே இல்லை”

“தவறில்லாமல் எதுவுமே இல்லை”


“என்ன ரவி பேச்சில் நிறைய வித்தியாசம் தெரிகிறது, அது சரி, நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன், நாம் ஆய்வகத்திற்கு இப்போதாவது செல்லலாமா?”

“உண்மையிலேயே இவர் கடந்த காலத்தில் இருந்து வந்தவர்தானா, அப்படி இருந்தால் தன் நினைவில் பார்த்த குரு சொன்னது போல் இவர் சார்ந்த கழகம் இந்த உலகத்தை ஆள செய்யும் திட்டத்திற்கு நாம் துனைப்போகிறோமா, அப்படி இவர் தீயவராக இருந்தால் இந்நேரம் நடந்த விஷயங்களை தெரிந்துக்கொண்டிருப்பாரே, என்னை ஏன் இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறார், கால இயந்திரத்தை பற்றி சென்றமுறை கேட்டது உண்மையா, இல்லை அதுவும் தன்னை திசை திருப்ப செய்த சதியா” என மனதுக்குள் நினைத்தவாரே ராமானுஜத்தை பின் தொடர்ந்து சென்றான் ரவி.

“என்ன ரவி மிகுந்த குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று உங்கள் முகம் சொல்கிறதே. நீங்கள் கேட்பதற்கு முன் நானே சொல்கிறேன், நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது அனைத்தும் உண்மையே, கழகத்தின் கட்டுப்பாட்டில் இந்த உலகத்தை கொண்டுவரச்செய்யும் முயற்சியில்தான் நான் ஈடுபட்டுள்ளேன். ஆனால்..”

“என்ன ஆனால்”

“டுமீல்..”


துப்பாக்கி வெடித்த திசையில் ஒரு உருவம் அவ்விருவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.தொடரும்.. tbc..

பி.கு.  இவையாவும் கற்பனையே.

2 comments:

மதுரை சரவணன் said...

aakaa thodarungkall...vaalththukkal

ravi said...

மிக்க நன்றி தோழரே..

Post a Comment