Sunday, 2 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 2: பொறி

ஆச்சிரியத்தில் இருந்த  ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்.  சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.  சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள்  சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி,  ரவி, இவங்க தான் என்னோட இந்த  ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.

ரா – ராமானுஜம்
ர – ரவி
தி – திவ்யா

ரா- நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது.

ர – மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க

ரா – கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை.  உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல்  கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்.

ர – அப்ப என் வேலை

ரா – அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை  உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா?

ர –  கனவா இல்லை நினைவா

ரா – சபாஷ்.  உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும்  உங்கள் நினைவுகள் மறுபடியும்  பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்.


“சாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.”

ரா -  திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.

தி – ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க  முடியும்.

ரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.

தி – சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க..

ரா – அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… 

“மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ” 


தன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ)  ராஜ ராஜ சோழன்.
தொடரும்..  tbc..

No comments:

Post a Comment