Sunday, 9 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 1 , அத்தியாயம் 2 & அத்தியாயம் 3

குருவின் ஆனைப்படி தனது முதல் இலக்கான தன் உடன்பிறந்த சகோதரனான அதித்ய கரிகாலனை பாண்டியர்கள் உடனான செவ்வூர் போரில் எதிரிகள் வேடமிட்டு தந்திரமாக கொலை செய்தான். போரில் பாண்டிய ஒற்றர்களால் கொலைசெய்யப்பட்டான் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.

குருவின் ரகசிய இருப்பிடத்தில் சந்தித்தான் அருண்மொழிவர்மன்.

“வணக்கம் குருவே”

“வருக வீரனே, குருவின் பெறுமையை நீ காப்பாற்றிவிட்டாய், நீ ஒரு செயல்வீரன் என்பதை நிருபித்துவிட்டாய், என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டாய், அதித்ய கரிகாலலின் இழப்பு சோழ சாம்ராஜ்ஜியத்தில் பலத்த சலனத்தை உருவாக்கும், , உன் மாமா உத்தமன் அரியணையில் அமர்வதற்கு தயாராக இருக்கிறான், இப்போது அவன் அரசனாக பதவி ஏற்கட்டும், எப்படியும் அதித்ய கரிகாலனின் கொலை மீதான சந்தேகம் மக்கள் மனதில் இருக்கும், அது அடுத்து அரியணையேரும் அரசனின் செயல்தான் என்று பெறும்பாலோர் நம்புவர், அரியணையில் ஏறுவது நம் முதல் நோக்கமல்ல, மக்கள் மனதில் இடம்பிடிப்பதே நம் முதல் நோக்கமாகும்..”

“சரி குருவே, அவன் ராஜ்ஜியத்திற்கு பின் உத்தமன் அவன் மகனுக்கு முடிசூட்டிவிட்டால் நாம் என்ன செய்வது.”

“அப்போதுதான் மக்கள் உன் பக்கம் இருப்பதை நீ சாதகமாக்கிக்கொள்ள வேண்டும், நீ உத்தமனை சந்தித்து, அவன் ஆட்சியில் பொறுப்பேர்க்க உனக்கு எந்த பிரச்சனையில்லை, ஆனால் அவனுக்குபின் உன்னைதான் அரசனாகமுடிசூட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உத்தமனின் முத்திரையை வாங்கிவிடு. அரசனாகும் ஆசையில் அவனும் இந்த ஒப்பந்தத்தில் உடன்படுவான்.”

“சரி குருவே, நான் உடனே சோழ தலைநகரத்திற்கு புறப்படுகிறேன்.”

“வெற்றி உனக்கே.”  என வாழ்த்தி அனுப்பினார்.
ரவி, ரவி, என பொறியில் படுத்திருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம்.

“இப்போது என்ன நடந்தது, ஏன் எழுப்பினீர்கள்.”

“உங்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை, ஓய்வறைக்கு செல்லுங்கள்.” என்று கூறி ஆய்வகத்தை விட்டு கிளம்பினார்.”

ஆய்வகத்தில் இருந்த திவ்யாவிடமிருந்து தனக்கு சாதகமாக ஏதாவது பதில் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளிடம் பேசினான் ரவி.”

“இங்க என்ன நடக்குதுனு நீங்களாவது சொல்லுங்க”

“மன்னிச்சிடுங்க ரவி, உங்ககிட்ட எதுவும் பேச கூடாதுனு எங்க பாஸ் உத்தரவுபோட்டிருக்கார்.”

“என் நிலமையில் இருந்து கொஞ்சம் பாருங்க, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் விஞ்ஞானியா இல்ல தீவிரவாதிங்களா, என்ன ஏன் இங்க கொண்டுவந்தீங்க, இல்ல, கடத்திக்கிட்டு வந்தீங்களானு ஒன்னுமே புரியில, பிளீஸ்  ஏதாவது சொல்லுங்க.”

“உங்களுக்கு இதுவரை தெரிந்ததே போதுமானது மற்றும் பாதுகாப்பானது.”

“பாதுகாப்பா, யாருக்கு? உங்களுக்கா இல்லை எனக்கா”


அமைதியாய் இருந்த திவ்யாவை பார்த்து, இனிமேல் இவளிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை, நேரடியாக ராமானுஜத்திடமே பேச வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினான்.

ஓய்வறையில் இருந்த ரவி ராமானுஜத்தின் வருகைக்காக  காத்திருந்தான்.

அடுத்த நாள் காலை,

“வாங்க ரவி, ஆய்வகத்திற்கு செல்லலாம், இனி காலம் பொன் போன்றது.” உறங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம். ரவியும் பின்தொடர்ந்து சென்றான்.

“திவ்யா வரும்வரை காத்திருப்போம், ஆமாம் ரவி என்னுடன் பேச வேண்டும் என்று கூறினீர்களா?”

“ம். இந்த ஆய்வில் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? முன்பு நீங்கள் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லையே”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை என்று சொல்லியது நினைவில் இருக்கிறதா? இப்போது இவ்வுலகில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா”

“ம், நினைவில் இருக்கிறது, அதற்கும் இப்போது நடைபெறுவதற்கும் என்ன சம்பந்தம்”

“இவ்வுலகம் குழப்பங்களின் உச்சத்தில் இருக்கிறது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உன் மூதாதயர்கள் துவங்கி இன்று வரை இந்த சமூகம் அதே குழப்பத்தில் இருக்கிறது, பதவியாசை, காட்டுமிராண்டித்தனம் என அனைத்தும் ஒன்று கூடி இந்த உலகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.”


“ சரி, இப்பொழுது என்ன சொல்ல வருகுறீர்கள், உங்கள் நிலை என்ன?”

“ஒழுக்கம் ரவி, உலகத்தில் ஒழுக்கம் தேவைபடுகிறது, அதை நோக்கித்தான் நாம் வேலை செய்ய  செய்துகொண்டிருக்கிறோம், இந்த உலகத்திற்கு ஒழுக்கத்தை புகட்டப்போகிறோம்.”

“ம்.. ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் உறுவாக்குகிறோம் என்று சொல்வது நம்பும்படியில்லை”

“உங்கள் நம்பிக்கை எனக்கு முக்கியமில்லை, ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு  அதுதான் சரியான பதில், மனித இனம் ஒரு சரியான திசையை தேடுகிறது, இங்கு எதற்காக வந்திருக்கிறோம், எதை செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை நாம் தரப்போகிறோம். எப்படி வாழப்போகிறோம் என்ற பதில் தெரிந்தவுடன் அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும்”

“அது எப்படி நடக்கும்”

“உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும், அதுதானே உன் கனவு, அருண்மொழிவர்மா”

“நான் அவன் இல்லை, இன்னும் இங்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை”“காலம் உங்களுக்கு புரிய வைக்கும், உங்களுக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அது எங்கே இருக்கிறது என்றும் சொல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.”

“எது எங்கே இருக்கிறது, எனக்கு ஒன்றும் புரியவில்லை”

"கால இயந்திரம்"

No comments:

Post a Comment