Saturday, 27 April 2013

யாருடா மகேஷ் 18+

யாருடா மகேஷ்

படம் பற்றி இனையதளத்தில் வந்த முதல் இரண்டு பதிவுமே படம் மிகவும் சுமார் என்ற ரீதியில் இருக்க, டிவிட்டரிலும் படம் போர் என பல பேர் சொல்லியிருந்தாலும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்  குறையவில்லை. படத்தின் டிரைய்லர் ஏற்படுத்திய ஈர்ப்பு அப்படி.

இப்படத்தின் விமர்சனம் தேவையான அளவிற்க்கு இணையத்தில் இருப்பதால், இப்படத்தை எப்படி இரசித்து பார்க்கலாம் என சில டிப்ஸ்.

இது முழுக்க முழுக்க அடல்ட்ஸ் ஒன்லி, டைட்டில் ஸீக்வென்ஸ் வரும் காட்சியை பார்த்தே ஏ சர்டிபிகெட் தந்திருக்க வேண்டும்.

காலேஜ் பள்ளி நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்யவும், ஜோடியாய் வருவதற்க்கு கண்டிப்பாக தடா, நண்பிகள் என்றால் ஒகே., மினிமம் ஐந்து பேருடன் பார்த்தால் கண்டிப்பாக ஜாலியாக டைம்பாஸ் ஆகிவிடும்.

படம் 11.30 என்றால் 11.45க்கு தியேட்டருக்குள் போகவும், மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் ஒப்பற்ற எண்ணற்ற சாதனைகளில் ஒன்றை மினி சினிமாவை பார்க்கும் கொடுமை நேரலாம்.

படம் முழுக்க டபுள் மீனிங் ஸ்டெரெயட் மீனிங் டைலாக்ஸ் அதிகம், பால் மனம் மாறாத நைட் பால் மட்டுமே குடிக்கும் பழக்கம் உள்ள வளர்ந்தவர்களுக்கும் இப்படம் புரியாது,

ஜோடியாக வந்தே தீருவேன் என்பவர்களுக்கு, லவ்வர்ஸ் வந்தால் கண்டிப்பாக பிரேக் அப், மனைவியுடன் வந்தால் கண்டிப்பாக டைவர்ஸ் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகும்.
(இது ஒரு அரிய வாய்ப்பு, முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளவும்.)

இது சாதாரணப்படம் இல்லை, படம் போரதுக்கு முன்னால நாடி நரம்பு இரத்தம் சதை புத்தி எல்லாத்துலையும் காம"டி" உணர்வ கொஞ்சம் ஓவர் டோஸோட மைன்ட செட் பண்ணிகனும்.

ஒரு பானை சோற்றில் ஒரு சோறு

what the dog.   "whatthe" dog

சில படத்துல கதை லாஜிக்  எதுவும் பார்க்காம இருக்குற மாதிரி இந்த படம் பார்க்கும் போது நான் ரொம்ப நல்லவன் இமேஜையும் கழட்டி வெச்சிட்டு பார்த்தா படம். செம லூட்டியா இருக்கும்.



No comments:

Post a Comment