Monday 4 July 2011

Thala pola varuma



இடம் - st patricks anglo indian hr sec school

தல - மச்சி நாளைக்கு படத்துக்கு 6  டிக்கெட் புக் பண்ணிட்டேன் இப்போவே லீவ் லெட்டர் ரெடி பிரின்சிபால் கிட்ட sign வாங்கிடலாம்.

ரவி - மச்சி நாளைக்கு கட் அடிச்சிடுவோம் அப்பறம் அடுத்த நாள் வயறு  வலி இல்ல தலைவலின்னு சொல்லி letter எழுதி permission வாங்கிடலாம்.

தல - போடா இப்போவே எழுதி வெச்சிடுவோம் இல்லனா மறந்துடுவோம்.

(வெற்றிகரமாக கட் அடித்து படம் பார்த்தபின் அடுத்த நாள் பள்ளியில் நாங்கள் ஆறு பேரும் காலை பிரின்சிபால் ஆபீஸ் வெளியில்)

தல - மச்சி நான் முதல போய்டறேன், எல்லோரும் வேற வேற reason தான் எழுதிருகோம் அதனால பிரச்சனை இல்ல.

(ஒரு ஐந்து நிமிடத்திற்கு பின் எங்கள் அனைவரையும் அழைத்து எல்லோருக்கும் ஒரு அரை மணி நேரத்திற்கு அர்ச்சனை. பின் ஒரு வாரம் outstanding students, imposition etc. etc. வெளிய நின்னு பாடம் படிச்சா என்னவோ போற வர எல்லா வாத்தியாரும் அட்வைஸ் பண்ணுவானுங்க.)

இந்த எல்லா விஷயத்துக்கும் காரணமான தலயோட லீவ் லெட்டர் 

respected sir,
                   as i will be suffering from severe stomach pain i will not be able to attend the classes on november 14th 2003. (friday) kindly accept my absence. 

                                                                                       
  yours obediently,

      xx

                                                                                                                  

பின்குறிப்பு 
இவ்வளவு கஷ்டபட்டு நாங்கள் பார்த்து அந்த வரலாற்று சிறப்பு பெற்ற 
திரைகாவியம்.





No comments:

Post a Comment