Monday 4 July 2011

Thala pola varuma II

ரமலான் நோம்பின் பொழுது ஒரு நாள் 

இடம் - கல்லூரிவாசல் 

தல - ரொம்ப நாளா எனக்கு பிரியாணி சாப்பிடனும் அதுவும் நோம்பு முடிஞ்சவுடனே மசுதியில  ( mosque) தருவாங்களே அந்த பிரியாணி சாப்பிடனும்னு ஆசை.

சமீர் - அது ஒன்னும் பிரச்சனை இல்ல  நாளைக்கு காலேஜ் முடிஞ்சு நேரா என்னோடு வாங்க. நான் சொல்றமாதிரி ஒழுங்கா இருந்தா நான் போற பள்ளிவாசலையே சாபிடலாம்.

தல - பிரியாணி கிடச்சா சரிதான் மச்சி..

சமீர் - மச்சி எல்லாரும் என் கூடயே இருக்கனும், அமைதியா நமாஸ் முடியிறவரைக்கும் யார் கிட்டயும் பேசகூடாது, துணி தலையில கட்டிகோங்க, நமாஸ்  முன்னாடி கை கால் கழுவிட்டு போகணும். 

ஹரி - எதுக்குடா தேவையில்லாத பிரச்சனை ஒழுங்கா பொய் தலபாகட்டுல
ஹாப் பிரியாணி சாபிடலாம்.

தல - ஓசியில கிடைக்கும் போது ஏன்டா காசு குடுத்து சாப்பிடனும். எவ்வளவுனால்தான் சாம்பார்சாதமும் புளியோதரையும் சாப்பிடறது .

அடுத்த நாள் பள்ளிவாசல் நுழைந்த ஒரே நிமிஷத்துல வெளிய நாங்க எல்லாரும் ஓடி வந்துட்டோம். தல செஞ்ச காரியத்துக்கு எங்கல சும்மா விட்டதே அந்த அல்லாவோட மகிமை.



தல செஞ்சதோடவடிவம் 





தல அப்படி என்ன சென்ஜாருணா கை கால் கழுவபோன இடத்துல நோம்பு இருந்தவங்க முன்னாடி நல்லா வாயில தண்ணிவிட்டு கொப்பிளிச்சி 
துப்புனாறு. அங்க இருந்தவங்க எல்லார் முகத்தையும் பார்க்க எங்க கணக்கு வாதி ஞாபகம் வந்தாரு.




விடு ஜூட்...

No comments:

Post a Comment